• Latest News

    November 23, 2014

    அனைவரையும் நெகிழ வைத்தார் சஜீத்!

    எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர்  மைத்ரிபாள சிறிசேன அவர்களின் தேர்தல் பிரசரங்களில் கிராமிய மட்டங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் ஒன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொது வேட்பாளர் மைத்திரி சிறிபால உற்பட ரணில், சஜித், மனோ கணேசன் ,உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி முக்கிய பிரமுகர் கள் பலர் கலந்துகொண்டனர்.இதன் போது மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை கடமையாக கருதி செய்வதாக சஜித் கூறி அனைவரையும் நெகிழ வைத்ததாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனைவரையும் நெகிழ வைத்தார் சஜீத்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top