• Latest News

    November 23, 2014

    ஐ.தே.கட்சியின் சிலர் அரசில் இணைய உள்ளனர்: ரோஹன திஸாநாயக்க

    எவரும் அரசாங்கத்தில் இருந்த வெளியேற மாட்டார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தில் இணைய உள்ளதாகவும் பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், சந்திரிக்காவின் சூழ்ச்சி காரணமாகவே மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.

    மைத்திரிபால சிறிசேன அதில் சிக்கிக்கொண்டார்.

    அடுத்த சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தில் இணைய உள்ளனர்.

    மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டார்கள்.

    உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளனர் எனவும் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    அதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகி  செல்பவர்கள் விலகி  செல்லட்டும் என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

    இருக்க முடியாதவர்கள் சென்றால்தான் எமக்கு பலம் கிடைக்கும்.

    26 பேர் குறைந்து போனாலும் அரசாங்கத்திடம் பலர் உள்ளனர். போகிறேன் என்று கூறி போகிறவர்கள் இறுதியில் குளத்தில்தான் குதிக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்
    TW-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.கட்சியின் சிலர் அரசில் இணைய உள்ளனர்: ரோஹன திஸாநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top