• Latest News

    November 20, 2014

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவும், அவரை விசுவாசிக்கவும் சமூகக் கடமையுண்டு: அமைச்சர் அதாவுல்லா

    அபூ இன்ஷாப்: எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உயிரோடு இருக்கின்ற வரைக்கம் அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு விசுவாசமாக இருக்கவும் எமது சமூகம் கடமைப்பட்டுள்ளது என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா நேற்று (19) புதன் கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் மத்தியில் ஆக்ரோசமான முறையில் சூளுரைத்தார்.
    இன்று  நல்லிரவுடன் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள்  மூன்றாவது தடவையும் தேர்தல் கேட்கலாம் என்ற  தேர்தல் அறிவிப்பை விடுக்க இருக்கின்ற இன்றைய நாளில் இந்த நாட்டிலுள்ள அரசியல் தலைமைகள் என்ன செய்வது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்று சம்மாந்தறையில் நடைபெறுகின்ற இந்த விழாவில் தேசிய காங்கிரஸின் தலைமை தெளிவான தீர்க்க தரிசனமான முறையில் சிந்தித்து தீர்மானித்துள்ளது மூன்றாவது தடவையும் இந்த நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதியும் ஆளுமையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது அவரே மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
    இந்த வெற்றியில் இந்த நாட்டிலுள்ள சகல சிறுபான்மைச் சமூகங்களும் ஒன்றினைய வேண்டும் பின்னர் கைசேதப்படுபவர்களாக மாறிவிடக் கூடாது என நான் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
    மஹிந்த சிந்தனை வேலை திட்டத்தின்; கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் வெலைத்திட்டத்தின்; கீழ் திவிநெகும பயனாளிகளின்;  வீடுகளை திருத்துவதற்கு 2,500 ரூபாய்   முதற்கட்ட கொடுப்பனவு வழங்குதலும் வாழ்வாதார அபிவிருத்திக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று (19) புதன் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் மூன்று தசாப்தகாலமாக எமது நாட்டில் நிலவிய ஆகோரம் நிறைந்த ஆயுதக்; கலாசாத்தில் சிக்குண்டு முலீம்களும் அதே போன்று தமிழர்களும் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தனர் சொந்த மண்னில் சுதந்திரமாக வாழமுடியாதவர்களாக ஏன் சொந்த வீட்டில் நிம்மதியாக நித்திரை செய்ய முடியாதவர்களாக இருந்த வரலாற்றின் வடுக்கள் இன்னும் நீங்க வில்லை.

    அன்று இருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை ஆட்சி செய்வதற்கான முஸ்தீபுகளையே செய்துவந்தனர் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய முன்வரவில்லை.

    இந்த காலகட்டத்திலேதான் பயங்கரவாதத்தை ஒளித்துக் கட்ட வேண்டும் மக்கள் எந்தவொரு அபிவிருத்யும் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழச் செய்ய வேண்டும் என்ற தூர நோக்கடன் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தெர்தலுக்கு முன்வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு தேசிய காங்கிரஸ் வழங்கிய ஆணையின் பிரகாரம் 30 ஆண்டுகள் புரையோடியிருந்த பயங்கரவாதத்தை 3வருடத்துள் நிறைவுக்கு கொண்டு வந்தார்; அதனால் பயனாக இன்று நாம் நிம்மதியாக தலைநிமிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    அதே போன்று தான்  2010ம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக எமது நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச் சென்று வருகின்றார். அன்று நாம் இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்க  இன்று நாம் நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றோம்  அதேபொல் எமது பிரதேசங்கள் சகல வழிகளிலும் அபிவிருத்தி கண்டு வருகின்றன இன்னும் எமக்கு என்ன வேண்டும்.

    அன்று எமது பள்ளிவாசல்களும் கோவில்களும் பறவைகளும் விசஜெந்துக்களும் வாழும் இடமாக காணப்பட்டது. ஏன் எமது வயல் நிலங்கள் அனைத்தும் வனாந்திரக் காடுகளாக காணப்பட்டன இன்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியவர்களின் துணிகரத்தினால் பெற்றுத்தரப்பட்ட சுதந்திரத்தினால் நிம்மதியுடன் சுதந்திரமாக எமது காரியங்களை ஆற்றி வருகின்றோம் எமது காணிகளையும் நிலபுலங்களையும் ஆண்டு அனுபவித்து வருகின்றோம்.

    இவ்வாறு எமக்கு நிம்மதியை ஏற்படுத்தியவரை நாம் ஆதரிப்பதா இல்லை இதற்கு எதிராக செயற்பட்டவர்களை நாம் ஆதரிப்பதா என நாம் ஒவ்வொருவரும் நமது நெஞ்சில் கைவைத்துக் கேட்க வேண்டும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

    இந்த நாட்டில் மீண்டும் ஒரு இருண்டயுகத்தை; கொண்டுவரத்துடிக்கும் மேற்கத்தையவர்களின் கை பொம்மைகளாக செயற்படும் கூட்டத்துக்கு நாம் ஒரு போதும் அடிமைப்பட்டுவிட முடியாது அவர்களின் நோக்கம் இந்த நாட்டில் பிரச்சினை இருக்க வேண்டும் பயங்கரவாதம் இருக்க வேண்டும் என்பதாகும் அதனை வைத்துக் கொண்டு அரசியல் செய்யலாம் அதன் மூலம் இலாபமீட்டலாம் என்பதாகும்.

    எனவே தான் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் வாக்களிக்கவில்லை என்ற பெரும்பான்மை மக்களின் கொரப் பார்வைக்கு ஆளாகிவடக் கூடாது மிகவும் புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும் என கூறிக் கொள்வதுடன் எதிர்வரும் ஜனவரி மாததில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவே வருவார் அதில் எந்தவித ஐயமும் கொள்ளத்தேவையில்லை நாமும் முளுமையாக அந்த வெற்றியின் பங்களியாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவும், அவரை விசுவாசிக்கவும் சமூகக் கடமையுண்டு: அமைச்சர் அதாவுல்லா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top