• Latest News

    November 22, 2014

    மத்திய முகாம் 'மக்தப் ஹிப்லு மதரசா' மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பொதிகள்

    அபூ இன்ஷாப்: அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் ஜூம்மா பள்ளிவாசலில் இயங்கி வருகின்ற 'மக்தப் ஹிப்லு மதரசா' மாணவர்களுக்கான கிதாபுக்கள் அடங்கிய கற்றல் உபகரணப் பொதிகள்; வழங்கும் நிகழ்வு இன்று (22) மத்திய முகாம் ஜூம்மா பள்ளிவாசலில் மக்தப் ஹிப்லு மதரசாவின் அதிபர் எம்.சீ.பயாஸ் தலைமையில் நடைபெற்றது.
    பிரபல சமூக செவையாளரும் மைஹோப் மற்றும் ஐவா தனயார் தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முகாமைத்தவப் பணிப்பாளருமான லயன் சித்தீக் நதீர் (எம்.ஜே.எப்) அவர்களின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 75 மதரசா மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
    இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளரும் மைஹோப் மற்றும் ஐவர் தாதியர் பயிற்சிக்கல்லூரியின் தலைவர் லயன் சித்தீக் நதீர் (எம்.ஜே.எப்) கலந்த கொண்டார்.
    மேலும் இந்த நிகவில் அதீதிகளாக மக்தப் ஹிப்லு மதரசாவின் பணிப்பாளர் ஏ.எல்.எம்.பஸீர், திவிநெகும அம்பாறை  மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர் முஹம்மட் ஹனீபா, மத்திய முகாம் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.உமர்கத்தாப், பள்ளி வாசலின் பேஸ் இமாம் அல்ஹாபிழ் பர்ஹான், ஏற்பாட்டாளர் றாப் லாபிர் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதீதி  லயன் சித்தீக் நதீர் உரையாற்றுகையில் வறுமை என்பது கல்விக்கு ஒருபோதும் தடையாக இருந்து விடக் கூடாது அது மார்க்கக் கல்வியானாலும் சரி, உலகக் கல்வியானலும் சரி இன்று அரசாங்கம் கல்விக்காக கூடுதலான பணங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றது.
    மார்க்கக் கல்வி நிறுவனங்களுக்கும் நிதிகளை அரசு ஒதுக்கினாலும் அது மார்க்கக் கல்வி நிர்வாக செயற்பாடுகளுக்கு போதுமாக அமைவதில்லை என்ற குறைபாடுகள் உள்ளது. அதனை நிவர்த்திக்க எமது நாட்டில் மாத்திரமல்ல அரபு நாடுகளிலிருக்கின்ற தனவந்தர்கள் உதவி வருகின்றனர் அந்தவகையிலேதான் எந்தவித கல்விக்கும் வறுமை காரணமாகிவிடக் கூடாது என்பதை நான் இந்த இடத்தில் கூறவிரும்புகின்றேன்.
    நானும் இந்தப் பிரதேசத்திலேதான் பலதரப்பட்ட கஷ;டங்களுக்கு மத்தியில் பிறந்து வழந்தவன் அந்த நேரத்தில் கல்வியினை கற்றுக் கொள்ள நாங்கள் எடுத்துக் கொண்ட சவால்களையும் கஷ;டங்களையும இப்போதுள்ள எந்த மாணவர்களும்; அனுபவிக்க கூடாது அனுபவிக்கமாட்டார்கள் இன்று ஏதோ ஒரு வகையில் வசதிகள் வாய்ப்புக்கள் அதிகரித்தக் காணப்படுகின்றன.
    எனவேதான் இந்தப் பிராந்தியத்திலே எத்தனையோ தனவந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு மக்களுக்கு வாரிவழங்கக் கூடிய மனவலிமையில்லாதவர்களாக காணப்படுகின்றனர்.
    இந்த நிலையிலே எமக்கு இறைவன் வழங்கிய செல்வத்தில் ஒரு பகுதியினை எமது பிரதேச  மாணவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவக் கூடியதான மான தைரியத்தையும் பக்குவத்தையும் வழங்கிய இறைவனுக்க நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
    எதிர்காலத்திலும் என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன் எனக் கூறியதுடன் இந்த ஏற்பாடுகளை செய்த ஏற்பாட்டளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்தும் ஏழை எளிய மக்களுக்க வாரிவழங்கக் கூடிய மனவலிமையை ஏற்படுத்திதர அனைவரும் இறைவனைப் பிராத்திக்குhறும் கோட்டுக் கொண்டார்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய முகாம் 'மக்தப் ஹிப்லு மதரசா' மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பொதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top