• Latest News

    November 22, 2014

    மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளார்!– ஏ.எச்.எம். அஸ்வர்

    முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

    நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

    சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார்.

    மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது.

    மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும்.

    சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார்.

    கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த விடயங்கள் பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.

    பாரிய கற்பாறையை அசைத்தாலும், மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது என அஸ்வர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

    வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளார்!– ஏ.எச்.எம். அஸ்வர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top