• Latest News

    November 15, 2014

    ஐ.ம.சு.வுடனான இறுதிப் பேச்சு முடிவு; செவ்வாயன்று ஹெல உறுமய தீர்மானம்

    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடனான இறுதிச்சுற்று பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டுள்ள ஜாதிக்க ஹெல உறுமய கட்சி, அரசாங்கத்தை விட்டு விலகுமா? இல்லையா? என்ற இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் என கட்சித் தாகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐ.ம.சு.கூ.வுடனான கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்றுக் காலை இடம்பெற்றது. ஐ.ம.சு.கூ.வின் பிரதிநிதியான தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும, ஜனாதிபதி தேர்தலில் தம் ஆதரவை கொடுப்பதற்கு ஜாதிக்க ஹெல உறுமய முன்வைத்த 35 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் ஐ.ம.சு.கூ.வின் பதிலை எழுத்து மூலம் வழங்கவுள்ளார்.

    ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில, ஐ.ம.சு.கூ.வின் பதிலை ஹெல உறுமயவின் தலைவர்கள் வார இறுதியில் ஆராய்ந்து தம் கருத்தை கட்சியின் மத்திய குழுவுக்கு திங்களன்று சமர்பிப்பர். எமது நிலைப்பாட்டை செவ்வாயன்று நாம் அறிவிப்போம் என்று அவர் கூறினார். 

    நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் சுதந்திரமான முறைமை, ஊழலுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய 35 அம்சக் கோரிக்கைகளையே ஹெல உறுமய முன்வைத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.ம.சு.வுடனான இறுதிப் பேச்சு முடிவு; செவ்வாயன்று ஹெல உறுமய தீர்மானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top