• Latest News

    November 16, 2014

    தென் ஆபிரிக்கா வெற்றி

    அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் அடங்கிய தொடரின் இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 1இற்கு 1 என சமன் செய்துள்ளது. பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடியா அவுஸ்திரேலியா அணி, 41.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மிச்சல் மார்ஷ் 67 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லீ 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல் அவரின் சிறந்த பந்துவீச்சு பெறிதியாக 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். டேல் ஸ்டைன் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆபிரிக்கா  அணி 27.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

    இதில் ஏபி.டி.வில்லியர்ஸ் 48 ஓட்டங்களையும், ரிலி ரொசோவ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோஸ் ஹஸல்வூட் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக மோர்னி மோர்க்கல் தெரிவு செய்யப்பட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென் ஆபிரிக்கா வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top