புலிகளுக்கு நிதி வழங்கிய சோல்ஹெய்ம்
இப்போது எமக்கெதிராக ஐ.நா.வில் சாட்சி சொல்ல தயாராகிறார். அவர் தொடர்பில்
நோர்வே முழுமையான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
பிரபாகரன் வடக்கு காட்டில் பிறந்தவரென்றால்
நான் தெற்குக் காட்டில் பிறந்தவன் என்ற துணிவிலேயே புலிகளை அழிக்க
புறப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, சோல்ஹெய்ம் புலிகளை மகாவல்லவர் களாகக்
காட்டி யுத்தத்தை நிறுத்த முயற்சித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்
வடக்கு மலையகத்துக்கான அதிவேக
நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ் வில்
உரையாற்றும்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்
எமது நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பது
புதிதல்ல. வரலாற்றுக் காலத்திலும் இருந்துள்ளன. “மஹவே’ என வரலாற்றில் அது
குறிப்பிடப்பட்டுள்ளது. பல அடி அகல பாதைகளும் ராஜதானிகளும் இருந்துள்ளன.
அது மட்டுமன்றி பிரித் தானியாவுக்கும் ஐரோப்பியாவுக்குமில்லாத சிறந்த
கலாசாரம் எமக்கிருந்தது. அது மீளக்கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
நாட்டில் கடந்த எட்டு வருடங்களுக்கு
முன்பிருந்த நிலமை என்னவென்று சகலருக்கும் தெரியும். அன்றிருந்த நாடா
இன்றுள்ளது என மக்கள் சிந்திக்க வேண்டும்.குருநாகலையில் குண்டு லொறியைப்
பொலிசார் சோதனை செய்து தடுத்திருக்கா விட்டால் அந்த லொறி முழு கொழும்
பையும் அழித்திருக்கும். இதுபோன்ற கடந்த கலங்களை பலர் இப்போது
மறந்துவிட்டனர்.
இவற்றை எவரும் இல்லையென்று சொல்ல முடியாது,
சோல்ஹெய்ம் எமக்கெதிராகச் சாட்சி சொல்ல தற்போது முண்டியடித்துக் கொண்டு
தயாராவதாக அறிய முடிகிறது.
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில்
எமக்கெதிராகச் சாட்சி சொல்லப்போகிறார். அன்று அவர் புலிகளுக்கு பணம்
வழங்கியவர் என்பதை அனைவரும் உணர வேணடும். இதனை நோர்வே முறையாக விசாரணை
செய்ய வேண்டும். சோல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கியதற்கான சாட்சி
எம்மிடமுள்ளது.
அவர் அக்காலத்தில் என்னிடம் வந்து என்ன
கூறினார் என்று பலருக்குத் தெரியாது. உங்கள் இராணுவத்துக்கு எந்த
முறையிலும் புலிகளை அழிக்க முடியாது அவர்கள் பாரிய திறமையுள்ள வர்கள்.
அவர்களுக்கு எதிரான போராட் டத்தைக் கைவிடுங்கள். அவர்கள் யுத்தம் புரிவதில்
மகாவல்லவர்கள் என்றார்.
]
“பிரபாகரன் வடக்குக் காட்டில் பிறந்தவர்
என்றால் நான் தெற்குக் காட்டில் பிறந்தவன்: ஒரு கை பார்ப்போம்” என்று நான்
பதில் கூறினேன். எவர் என்ன நினைத்தாலும் 30 வருடத்தில் எவராலும் முடிக்க
முடியாத யுத்தத்தை நாம் முடித்தோம்.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
எனினும், தேர்தல் நெருங்குவதால் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ தன்னைப் பற்றி பொய்கூறியுள்ளதாகவும், இன்று திங்கட்கிழமை
உண்மை நிலையை தெளிவுபடுத்துவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் சமூக
வலைத்தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment