எதிர்க்கட்சிகளின் கூட்டணி புதிய சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் நேற்று பொது வேட்பாளரை அறிமுகம் செய்திருந்தது.
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கூட்டணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கூட்டணி தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் என்ன சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கான பெயர் மற்றும் சின்னம் தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment