அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழு தலைவரான அவர், கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் செயற்பட்டுவந்தார்.
அரசாங்கத்தினால், தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரபூர்வ வாகனத்தையும் தான் மீள கையளிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டமூலத்துக்கு” ஆதரவு வழங்குவதாக முன்னர் கூறியிருந்த அரசாங்க தரப்பினர், இப்போது திடீரென மீண்டும் ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளதாகக் கூறியுள்ள ரத்ன தேரர், அதனை கண்டித்துள்ளார்.
இதேவேளை, தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஜனாதிபதி தேர்தலை நடத்த முற்பட்டால்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளில் தான் இறங்குவேன் என்று முன்னதாக எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் அவர் கூறியிருந்தார்.
கடும்போக்கு சிங்கள தேசியவாதக் கட்சியாக ஜாதிக ஹெல உறுமய பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அண்மைக்காலமாக சிங்கள தேசிய வாத வாக்காளர்களில் வாக்குகளை இலக்கு வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் செயற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் பார்க்கும் நிலையில், இந்த அமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக திரும்புவது, அரசாங்கத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.-BBC

0 comments:
Post a Comment