அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் அனைத்து சக்தியும் எம்மிடமே உள்ளதென தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிங்கள பௌத்த கொள்கையினை வலுப்படுத்தி பாதுகாக்க தயாராகவிருக்கும் ஒருவராலேயே அடுத்த ஜனாதிபதியாக வரமுடியும்எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபலசேனா இளைஞர்அமைப்பின் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியில் இருந்து 500 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பௌத்த குருமார்களும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
நாட்டின் சிங்கள பௌத்த கொள்கையினை வலுப்படுத்தி அதனை பாதுகாக்க தயாராகவிருக்கும் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரமுடியும்அதனை தீர்மானிக்கும் அனைத்துச் சக்தியும் எம்மிடம் காணப்படுகின்றது. அரசியல் அமைப்பினை மாற்ற வேண்டும் என ஒரு சில எதிர்க்கட்சிகளும் சில ஆளும்கட்சி தரப்பினரும், பௌத்த குருமார்களும் அணிதிரண்டு சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் நோக்கமானது நாட்டில் அரசியல் அமைப்பினை மாற்றுவது அன்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதும் அதனூடாக தமது ஆட்சியை நிலை நாட்டும் ஒரு சுயநல போக்குடனேயே இதனை மேற்கொள்கின்றனர்
நாட்டில் பௌத்த இராச்சியமே அவசியம்
எமது நாட்டின் பௌத்த மக்களின் கௌரவத்தை தக்கவைத்து கொள்ளவும் பௌத்த இராச்சியத்தை நிலைநாட்டவும் நாட்டில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைஇ மதப்பிரச்சினை ஏனைய பிரச்சினைகளுக்கு பெளத்த இராச்சியத்தை உருவாக்கு வதன் மூலமே தீர்வு காணமுடியும். இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பிரசாரங்களையும் செய்து வரும் இவ்வாறான தரப்பினர் பெளத்த கொள்கையினை கட்டியெழுப்புவதும் அதனை பாதுகாத்திடுவது தொடர்பிலும் பேசுவதில்லை. இது மக்களை ஏமாற்றும் ஒரு வேலைத்திட்டம். இதற்கு இடம் கொடுப்பதினால் மக்களுக்கோ அல்லது நாட்டிற்கோ எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.
நிபந்தனைகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாம் முன்வைத்த நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் எம்மீது பாரிய குற்றச்சாட்டுகளும் பிரசாரங்களும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன ஜனாதிபதி தேர்தலானது எம்மை பொறுத்த வரை ஒரு பெரிய விடயமல்ல. எமக்கு பௌத்த தர்ம கொள்கையே அவசியம் என்பதால் அதனை பாதுகாக்கவும் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் தரப்பினருடனேயே எமது செயற்பாடுகள் அமையும்.
முஸ்லிம் தீவிரவாதம்
நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகள்தலைதூக்கி காணப்படும் இத்தருணத்தில் 18 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் 19 ஆம் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரசாரங்களை கூறி வருவதை தவிர்த்து சிங்கள பௌத்த இராச்சியத்தை கட்டியெழுப்பவும் மக்களை பாதுகாக்கவும் எம்மோடு கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் .

0 comments:
Post a Comment