• Latest News

    December 03, 2014

    அலரி மாளிகையில் மாதாந்த உணவுக்கு மாதம் 25 மில்லியன் ரூபா செலவு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க

    அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

    கொழும்பில், ஹைட் பார்க்கில் நேற்று நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

     அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தகவல் வெளியிட்டார்.

    ஊழல்மிக்க ராஜபக்ச அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விட்டுச் செல்வதை தடுப்பதற்காக அவர்களுக்கு 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் சந்திரிக்கா குற்றம்சாட்டினார்.

    “எங்களைத் தேசத் துரோகிகள் என்றும், 100 நாட்களுக்குள் நாட்டை புலிகளிடம் கொடுக்கப் போவதாகவும் அரசாங்கம் பரப்புரை செய்கிறது.  ஆனால் தேசத் துரோகிகள் எம்மத்தியில் இல்லை. துரோகிகளை அரசாங்கத்தில் வைத்திருப்பது ராஜபக்ச ஆட்சி தான்.

    பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்த கருணாவை அமைச்சராக வைத்திருக்கிறார். புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதனுக்கு முக்கிய பிரமுகர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

    “இந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடத்தில் தந்தையும், 14வது இடத்தில் மகனும் இருக்கின்றனர் என்று மகிந்த ராஜபக்சவையும், நாமல் ராஜபக்சவையும் சுட்டிக்காட்டினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அலரி மாளிகையில் மாதாந்த உணவுக்கு மாதம் 25 மில்லியன் ரூபா செலவு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top