எந்த
அழுத்தங்கள் வந்தாலும் எதிர்காலத்தை வெற்றி கொள்வதற்காக கல்வி பெற்று
கொள்ள வேண்டியது சகல பிள்ளைகளினதும் பொறுப்பு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார். நாரேன்பிட்டவில் நேற்று இடம் பெற்ற மகபொல புலமை பரிசில் வழங்கும் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நோக்கத்தை கொண்டு செயற்பட்டமை
காரணமாகவே இந்த வரப்பிரசாதம் கிடைக்க பெற்றது. பிற மொழிகளை கற்று கொள்கின்ற
போது பல அழுத்தங்கள் ஏற்படுகின்றன. நாங்களும் ஒரு கட்டத்தில் நினைத்தோம்
ஒரு மொழி மாத்திரம் போதும் என்று.நாம் கட்டமாக சர்வதேச மொழிகளை கற்று கொள்ள
வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment