எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க பிரபல திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்க
தீர்மானித்துள்ளார்.
இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
பயங்கரவாதம்
முடிவுக்கு வந்தபோதிலும் ஊழல், மோசடி, திருட்டு, நீதிமன்ற செயற்பாடுகளில்
தலையீடு போன்றவற்றால் நாடு தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்து வருவதாக
சோமரத்ன திஸாநாயக்க கூறியுள்ளார்
இத்தகைய முறைகேடுகளை தடுப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர், தற்போதைய சூழலில் அதனை
எதிர்ப்பார்க்கவும் முடியாது என தெரிவித்துள்ளார்.
இதே திசையில் நாடு
தொடர்ந்தும் பயணிப்பதற்கான அனுமதியை மனசாட்சிக்கு நேர்மையாக எந்தவொரு
பிரஜையாலும் வழங்க முடியாது என திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்க
குறிப்பிட்டுள்ளார்.
இந்த தவறான பயணத்தை தடுக்கும் வகையில், பொது
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாக அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
news1st

0 comments:
Post a Comment