எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டு
இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்பின்னர் அவர்களில்
சிலர் கொடுத்த யோசனைகளை அடுத்து, அவர் மகிந்தரின் கட்சியில் உள்ள சிலருடன்
பேசியுள்ளதாக இன்றைய தினம் செய்திகள் கசிந்துள்ளது.
இச்செய்தி மகிந்தரின் காதுகளுக்கும்
எட்டியுள்ளதால், அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளதாக கொழும்பில் இருந்து
தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை சந்திரிக்காவை கைதுசெய்யமுடியுமா என்று
ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளோடு இணைந்து இலங்கையின்
இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டார் என்று, அல்லது தேசவிரோதச் செயல்களில்
ஈடுபடுவதால் தேசிய பாதுகாப்பு சட்டம் ஊடாக அவரைக் கைதுசெய்ய முடியுமா என்று
ஆராயப்படுகிறது. மகிந்தரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும்
சந்திரிக்காவை அடக்கினாலே போதும்.
வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று
விடலாம் என்று சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். வாழ்வா சாவா என்ற
போராட்டத்தில் மகிந்தவின் குடும்பம் உள்ளது.
இன்யை அரசியலில் பாரிய சவாலாக
விளங்கிவரும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா இலங்கை அரசியலில் இன்றைய
ஜனாதிபதிக்கு பாரிய சவாலாக உள்ளார்.
கொழும்பு அரசியலில் பாரிய சவாலாக விளங்கும் விடயம், எதிர் வரும் வாரங்களில் விடைகலாக அமையலாம் .
thanks: puttalamtoday.com
0 comments:
Post a Comment