தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார்.
நிதி
மோசடி தொடர்பாக குறித்த கைதி பாதுகாப்பின் கீழ், சிகிச்சைக்கு
உட்படுத்தப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பல்லேகம
தெரிவித்தார்.
களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக இந்தக் கைதி கொண்டுவரப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக 35 வழக்குகள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பல்லேகம தெரிவித்தார்.
இந்தச்
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவின் ஆணையாளர் தலைமையில்
விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment