சஹாப்தீன்: நேற்று நடைபெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று பலத்த விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. மஹிந்தராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவர்களில் யாரை ஆதரித்தால் நன்மைகள் கிடைக்குமென்று இரு பக்க விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால், தீர்மானத்தை எடுக்காத நிலையில் மு.காவின் உயர்பீடம் கலைந்துள்ளது.
இதே வேளை, எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை விட்டு விலகுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, ஜனாதிபதித் தேர்தலில் மு.கா மக்களின் மனங்களுக்கு அமைவாக முடிவு செய்யாவிட்டால், தனித்து இயங்குவதற்கு ஒரு குழுவினர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்சி சரியான முடிவினை எடுக்காது போனால், நாங்கள் தனித்து இயங்குவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதனை அடுத்தே, நேற்றுக் கூடிய மு.காவின் உயர்பீடத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது. மு.காவின் உயர்பீடத்தில் விவாதிக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கு எம்மோடு இணைந்திருங்கள்

0 comments:
Post a Comment