அரசாங்கம் திஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி
தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின்
தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன சவால்
விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் திஸ்ஸ
அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில் கூட தோல்வியுற்றவர். அதேவேளை
ஐ.தே.கவுக்கு அத் தொகுதியில் இரண்டாம் இடம் கிடைத்தது. எனவே திஸ்ஸ
அத்தநாயக்க ஒரு அரசியல் தோல்வியாளர் என மைத்திரி குணரத்ன.
இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்
சிரால் லக்திலக, ஐ.தே.க பொதுச் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டார
அல்லது இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை
விடுத்தார்.

0 comments:
Post a Comment