• Latest News

    December 24, 2014

    சிறிகொத்த மீது தாக்குதல் நடத்தியது வீரவன்ஸவின் குண்டர்கள்!

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது அமைச்சர் விமல் வீரவன்ஸவின் குண்டர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த குண்டர்கள் கட்சியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சுக்குரிய நிறுவனங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழியர்களை அரசியல் ஆர்ப்பாட்டத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் ஏனைய ஊழியர்கள் விமல் வீரவன்ஸவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

    ரணில் – மைத்திரி உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போர்வையில் அமைச்சர் விமல் வீரவன்ஸ, நடத்தி வரும் தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என்று அமைச்சின் ஊழியர்களை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பொலிஸாரின் கண்ணில் படும் வகையில் வீரவன்ஸவின் குண்டர்கள் தாக்குதல் நடத்த பொல்லுகளையும் கையில் வைத்திருந்தனர்.

    அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான G18272 என்ற இலக்கம் கொண்ட வானில் ஊழியர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
    TW -









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறிகொத்த மீது தாக்குதல் நடத்தியது வீரவன்ஸவின் குண்டர்கள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top