கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தமக்கு நெருக்கமான ஒருவரை நியமித்துக் கொள்வதற்காக அரசாங்கம் காய்நகர்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இலங்கையின் 41ஆவது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த டப்.பீ.சீ.விக்ரமரத்ன, கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தார்.
அதனையடுத்து, பிரதி கணக்காளர் நாயகம் பதவியில் இருப்பவரையே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நியமிக்குமாறு கணக்காய்வாளர் சேவை அதிகாரிகள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், அரசாங்கம் அதற்கு எதுவித பதிலும் வழங்கவில்லை.
அதற்குப் பதிலாக கணக்காய்வாளர் நாயகமாக தமக்கு நெருக்கமான ஒருவரை வெளியில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் காய்நகர்த்தி வருவதாக கணக்காய்வாளர் சேவை அதிகாரிகள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment