மொனராகலைப் பிரதேச விகாரை ஒன்றின் விஹாராதிபதி, இளம் பிக்குவை பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் மே மாதம் 13 ஆம் திகதி வரையான ஒரு மாத காலமாக மேற்படி பிக்கு சிறுவனை மொனராகலை விஹாரையொன்றைச் சேர்ந்த விஹாராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளார்.
மேற்படி குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்ட விஹாராதிபதி பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் மீண்டும் விசாரணைகளின் போது அவர் நீதிமன்றம் ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஹாராதிபதி, பிக்கு சிறுவன் தொடர்பான வைத்திய அறிக்கையின் பிரகாரம் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு மொனராகலை நீதிவான் நீதிமன்றம் 30 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன், 75 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம் மேலும் 75 ஆயிரம் ரூபாவை பாதிக்கப்பட்ட இளம் பிக்குவுக்கு இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment