• Latest News

    December 16, 2014

    நாட்டின் தலைமையை மாற்றுவது குறித்து மன்னார் ஆயருக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

    நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றியமைப்பது குறித்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    சந்திரிக்காவை சந்தித்து பேசியதாக மன்னார் ஆயர் ஜோசப் கடந்த 14ம் திகதி, மன்னார் அரிப்பு மரியா கத்தோலிக்க தேவாலய விசுவாசிகளுக்கு அறிவித்துள்ளார்.

    வாராந்த திருப்பலி பூஜையின் பின்னர் தேவாலயத்தின் அருட்தந்தையானவர், ஆயர் விசேட செய்தியொன்றை சொல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

    திருப்பலி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 350 – 400 வரையிலான விசுவாசிகளின் முன்னிலையில் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உரையாற்றியுள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தேன். நாம் அனைவரும் இணைந்து நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

    கொலையாளிகள் இன்று நாடாளுமன்றில் இருக்கின்றார்கள். கருணா போன்றவர்களும் அதில் அடங்குகின்றனர். எனினும் அப்பாவி சிறுவர், சிறுமியர் புனர்வாழ்வு நிலையங்களில் அவதிப்படுகின்றனர்.

    எனவே வேறு ஆட்சி ஒன்று நோக்கி நகர வேண்டியுள்ளது என மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    TW -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டின் தலைமையை மாற்றுவது குறித்து மன்னார் ஆயருக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top