நிந்தவூர் நிருபர்:
நாளை சனிக்கிழமை சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரி.ஹஸன்அலிக்கு நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு விழா நடைபெறவுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தலைமையில் நாளை மாலை 04.00 மணியளவில் நிந்தவூர் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொள்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஐ.எம்.எம்.மன்சூர், ஆரிப் சம்சுதீன், ஏ.எம்.நசீர், ஏ.எம்.தவம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளார்.
சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன்அலி நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment