• Latest News

    February 15, 2015

    பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

    “ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம்” பிப்ரவரி 17பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி  (14-02-2015) காலை 11 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணை தலைவர் A.காலித் முஹம்மது  அவர்கள் கூறியதாவது:

    இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள்,பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

    தமிழகத்தில் மனித நீதிப் பாசறை (MNP) என்ற பெயரில் மக்களின் சமஉரிமை, நீதி மற்றும் பாதுகாப்பிற்காக முன்னணியில் நின்று போராடினோம். நம்மை போன்றே அண்டை மாநிலமான கேரளத்தில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (NDF) மற்றும் கர்நாடகத்தில் செயல்பட்டு வந்த கர்நாடகம் போரம் பார் டிக்னிடி (KFD) ஆகிய இயக்கங்களும் இதே இலட்சியத்திற்காக போராடி வந்தது. இந்த மூன்று இயக்கங்களும் ஒரே குடையின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் 2007 பிப்ரவரி 17 அன்று பெங்களூரில் நடந்த வலிமையான இந்தியாவை உருவாக்கும் (Empower India Conference) மாநாட்டில் ஒற்றை இயக்கமாக செயல்பட துவங்கியது. இன்று நமது இயக்கம் தேசிய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வடக்கு, மேற்கு,கிழக்கு, வட மேற்கு என அனைத்து மாநிலங்களிலும் கால்பதித்து ஆலமரம் போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    அதே போன்று நமது இயக்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. இது சமூக நீதிக்கான மக்கள் போராட்டத்தின் பாதையில் ஒரு சகாப்தமாகும்.எனவே இத்தினத்தை மக்களின் உரிமைக்கான தினமாக நாம் கொண்டாடி வருகின்றோம்.

    இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட்    தினத்தில் “ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம்” (United For Democracy)என்ற முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இதன் பொருள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் அனைத்து மக்களின்கடமையுணர்வையும், உறுதியான நிலைபாட்டையும் வெளிப்படுத்துவதாகும். மேலும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக செயல்படும் ஃபாஸிச சக்திகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தி தேசத்தின் வளங்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்தலின் அவசியத்தை உணர்த்துவதே நமது நோக்கமாகும்.

    பிப்ரவரி-17 பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், விளையாட்டு போட்டிகள், மருத்துவ முகாம்கள்,பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லிலும், சென்னையிலும் யூனிட்டி மார்ச்(Unity March) என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். பேகம்பூர் மதுரை ரோட்டில் மாலை 03.30மணிக்கு பேரணி தொடங்கி நிறைவு பொதுக்கூட்டம் பேகம்பூர் வத்தலக்குண்டு சாலையில்  நடைபெற உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணை தலைவர்  A.காலித் முஹம்மது ,மாநில செயற்குழு உறுப்பினர்  S.இல்யாஸ் , மற்றும் திண்டுக்கல் மாவட்ட  மாவட்ட தலைவர்A.கைசர்   ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top