• Latest News

    February 25, 2015

    மருதமுனை பொது நூலகத்தை மருதுர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகமாக பெயர் மாற்ற, கல்முனை மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

    எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
    மருதமுனையின் முதற் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மருதமுனை வாசகசாலையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமான, கவிஞர் மருதுர்கனி எனப்படும் மறைந்த  யூ.எல்.எம்.ஹனீபா ஆசிரியர் அவர்கள் வாழ்ந்த மருதமுனை கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல், சமூகப்பணிகளையும் மேற்கொண்டதர்க்காக அன்னாரை கௌரவிக்க அவரது பெயரை மருதமுனை பொது நூலகத்துக்கு இட கல்முனை மாநகரசபை அங்கீகரிக்க வேண்டும் என, கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

    கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் தலைமையில் 2015-02-24 ம் திகதி மாலை மாநகரசபை சபாமண்டபத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தனிநபர் பிரேரணையை, உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி சபைக்கு முன்வைத்தார்.

    தொடர்ந்து உரையாற்றிய உறுப்பினர் உமர் அலி, பாராளமன்ற பதவிக் காலங்களில் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் 90 வீதத்தை தான் நேசித்த மருதமுனைக்கு வழங்கியதுடன் குறிப்பாக பொது நூலகத்தின் கட்டிடப்பணிகளுக்கும் அதிகமான நிதியினை ஒதுக்கியிருந்தார். சிறந்த வாசகனாகவும், கவிஞனாகவும் இருந்த யூ.எல்.எம்.ஹனீபா அவர்கள் மரணித்த பின்பும் அவரது மருதுர்க்கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையம் ஒன்றை நிறுவி பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மருதமுனையின் முதற் பாராளமன்ற உறுப்பினரும் கவிஞரும் சமூகசேவையாளருமான, மருதுர்கனி அவர்களின் பெயரை குறித்த மருதமுனை பொது நூலகத்துக்கு இடவேண்டும் என கடந்த 07-02-2015ல் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் மருதமுனையின் உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான முன்மொழிவுகளும் ஆவணப்படுத்தலும் என்ற தலைப்பில் இடம்பெற்ற புத்திஜீவிகள் சந்திப்பின் போது மருதுர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகம் என்ற பெயரை மருதமுனை பொது நூலகத்துக்கு இடவேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் தனது பிரேரணையை முன்வைத்தார்.

    குறித்த பிரேரணைக்கு சார்பாக கருத்துத் தெரிவித்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், அரசியலுக்கு தன்னை அறிமுகம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப போராளியான மருதுர்கனி அவர்களின் பெயரை குறித்த மருதமுனை பொது நூலகத்துக்கு இடவேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு தனது பூரண ஆதரவை தெரிவிப்பதாகவும் எத்தனையே நல்லவர்களை உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் சில கட்டாக்காலிகளுக்கும் முகவரிகளைப் பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்தார். இவர்குக்கு மத்தியில் தான் மரணிக்குமட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்திருந்ததாகவும் அன்னார் இக்கட்சிக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவையை யாராலும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

    மருதுர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகம் என பெயரை மாற்றுவதற்கு ஆதரவாக முதல்வர் நிஸாம் காரியப்பர்,பிரதிமுதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் மற்றும் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.
    குறித்த பிரேரணை சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதுடன் முதல்வர் நிஸாம் காரியப்பர், குறித்த பெயர் மாற்றத்துக்கான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை பொது நூலகத்தை மருதுர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகமாக பெயர் மாற்ற, கல்முனை மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top