• Latest News

    February 25, 2015

    கிழக்கில் அதிகாரம் பகிரப்படவில்லை! முதலமைச்சரின் செயல் பிரச்சினைக்குரியது: கபே

    கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சகல அமைச்சு அதிகாரங்களும் குவிந்து இருப்பது மிகவும் பாரதூரமான நிலைமையை உருவாக்கியுள்ளது என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. 
     
    கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி  தென்னக்கோன்கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் நசீர் அஹமட் மாகாண சபையின் அனைத்து அமைச்சுக்களையும் தன்வசம் வைத்து கொண்டு ஏனைய அமைச்சர்களை நியமிக்காது இருப்பது குறித்து ஆளுநர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    கிழக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபைகள் சட்டத்திற்கு அமைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களை நியமிக்காது சகல அமைச்சுக்களையும் தன்வசம் வைத்துள்ளார். இந்த நிலைமையானது அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பான அடிப்படைப் பிரமாணத்தை மீறும் செயல் என கபே அமைப்பு காண்கிறது.

    மாகாண சபை சட்டத்திற்கு அமைய முதலமைச்சர் நான்கு அமைச்சர்களை நியமிக்க முடியும். மாகாண சபை வரலாற்றில் அது செயற்பாட்டு ரீதியானதாக இருந்து வந்துள்ளது. அதிகாரத்தை பரவலாக்கும் எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.

    இதனால், ஒரு நபரிடம் அதிகாரம் செல்வது மாகாண சபை முறைமையை திரிபுபடுத்துவதாகும். மாகாண சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிய பின்னர், வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் வரை சகல அமைச்சுக்களையும் தனது பொறுப்பில் வைத்து கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

    தேசிய அரசாங்கத்தின் அடிப்படையில் மாகாணத்தில் அமைச்சு பதவிகளை பகிரப் போவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சு பதவிகளை இதுவரை பகிரவில்லை. இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

    கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொண்ட தரப்பும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டுள்ளது.

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை கொண்டுள்ளன. இதனை தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும், தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தை கிழக்கு மாகாண சபையில் கொண்டுள்ளன.

    7 ஆசனங்களை கொண்டுள்ள ஒரு கட்சியின் உறுப்பினர் மாகாண சபையின் அனைத்து பதவிகளையும் தன்வசம் வைத்திருப்பது பாரதூரமான பிரச்சினை எனவும் கபே, கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கில் அதிகாரம் பகிரப்படவில்லை! முதலமைச்சரின் செயல் பிரச்சினைக்குரியது: கபே Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top