தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னதாக விமல் வீரவன்ச இவ்வாறு புலனாய்வு பிரிவிற்கு சென்றுள்ளார்.
வாக்கு மூலமொன்றை அளிக்கும் நோக்கில் விமல் வீரவன்ச இவ்வாறு புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
தற்போது புலனாய்வுப் பிரிவில் வாக்கு மூலம் அளித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை நேற்று மாலை பொலிஸார் மாலம்பே பிரதேசத்தில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment