கடந்த காலங்களிலும் ரணில் விக்ரமசிங்க இவ்வாறான சவால்களை விடுத்துள்ளார்.
அவரது வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் இவ்வாறான சவால்களை விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடாமல், ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்.
இந்த விடயம் ரணில் விக்ரமசிங்கவின் மனச்சாட்சிக்கு நன்றாகத் தெரியும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சவால்கள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டுமெனவும், பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக குறைப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment