தற்போது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு அடிப்படையிலேயே தேர்தல்களை நடாத்த புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ள காரணத்தினால், புதிய தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்யவதற்கு போதிய கால அவகாசம் கிடையாது.
எவ்வாறெனினும் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டால் அதன் பின்னர் இரண்டரை மாதங்களில் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment