கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள் தங்களின் உரிமைக்காக போராடி வருகிறார்கள். உரிமை என்பது உறுதி செய்யப்பட்ட சுதந்திரமாகும். பெரும்பாலான பெண்களுக்கு படிப்பறிவு இல்லாததால் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டுவதில்லை. பெண்களின் கல்வி என்பது காலத்தின் கட்டாயமாகும். ஒரு பெண் கல்வி கற்பதால் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்; இதனால் ஒட்டுமொத்த சமூகமும் மேம்படும். அவர்கள் தங்களை சுதந்திரமான ஜனநாயகத்தின் சிறந்த குடிமக்களாக தன்னை நிரூபிக்க வேண்டிய முக்கிய கடமையும் இருக்கிறது.
நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் கல்வி முக்கிய அங்கம் வகிக்கிறது. பெண்களின் கல்வியை புறந்தள்ளிவிட்டு வளர்ச்சி பெற்ற தேசத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் நமது ஜனநாயகத்தை வெற்றியடைய செய்யவேண்டுமெனில், பெண்கள் கல்வி கற்க வேண்டியது அவசியமாகிறது. உலகிலுள்ள ஏழ்மையான நாடுகளில் 50% அதிகமான பெண்கள் உயர்நிலை பள்ளிகளில் பயிலாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கண்டத்தில், பெண்களின் கல்வியறிவில் இந்தியா குறைந்த அளவிலே பின்தங்கி நிற்கின்றது. 2011 கணக்கெடுப்பின்படி, இந்தியர்கள் கல்வியறிவு விகிதம் 73%. இவற்றுள் 65.46% பெண்களே கல்வியரிவுடையோர் ஆவர். அதே நேரம் 80% ஆண்கள் கல்வியரிவுடையோர் ஆவர். இதன்மூலம் இந்தியா பெண்களின் கல்வி விசயத்தில் சமத்துவமற்ற நிலையை அறியமுடிகிறது. ஒரு கல்வியறிவுள்ள இந்திய பெண்ணால் இந்நாட்டின், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான ஆற்றலை செய்ய முடியும்.
கல்வியறிவை பெற்று தேசத்திற்கு அளித்த பங்களிப்பு செய்தியாக மாறியிருக்கின்றது நாம் நமது தேசத்தில் இத்தைகய ஆளுமை மிகுந்த பெண்கள் பலரை பார்த்துள்ளோம். சுதந்திரப் போராட்டத்தின் போதும் தற்போதைய ஜனநாயக போராட்டங்களிலும் தலைசிறந்த சமூகத்தை கட்டி எழுப்ப பெண்கள் தங்கள் ஆற்றலையும் திறமைகளையும் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாறிவரும் சமூக சூழலில், பெண்கள் தங்களின் பங்களிப்பை குறித்து மீளாய்வு செய்து, தெளிவுற்ற பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட தங்களுடைய பெண் குழந்தைகளை தயார்படுத்திட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளித்து, அவசியப்பட்ட இடங்களை கண்டறிந்து உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். கல்வியில் பின்தங்கியுள்ள பெண்களை பட்டியலிட்டு முன்னேற்றவேண்டும். மிக சிறந்த மனித சமூகத்தை உருவாக்கிட சமூகத்தின், தார்மீக பாதுகாவலர்களான பெண்களை அனைத்து வழிகளிலும் சக்திபடுத்துவதும், கல்வி பயில செய்வதும் அவசியமாகும்.
எனவே உலக மகளிர் தினத்தையொட்டி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசம் முழுவதும் போஸ்டர், நோட்டிஸ், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி பெண்களிடம் விழிப்புணர்வையும், மத்திய மாநில அரசிடமும் கோரிக்கை வலியுறுத்தி வருகிறது.

சீ. சித்தி ஆலியா,
மாநில பொதுச்செயலாளர்,
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்.

0 comments:
Post a Comment