• Latest News

    March 12, 2015

    குற்றச்சாட்டு: மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி அரசியல் செய்ய மு.கா முயற்சி

    அபூ-இன்ஷப்:
    ஜனநாயகரீதியில் மக்களால் மக்களுக்காக பணியாற்றுவதற்கென தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதி நிதிகளை விலைகொடுத்து வாங்கி அரசியல் பிழைப்பு நடாத்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது இதனால் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது இந்த கைங்கரிகத்தைதான் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செய்து வருவதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் ,உதவி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
     அம்பாறை ஆரியவன் விடுதியில் முன்னாள் மாகாண கல்வி மற்றும் காணியமைச்சர் விமலவீர திசாநாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
    ஊடவியலாளர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்து தொடர்து உரையாற்றுகையில் இந்த நாட்டிலே அரசியல் மாற்றமொன்றை நோக்கிய பயணத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் முடிவின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் பணியாற்றியவர்கள் நாங்கள்.
    அதேபோன்றுதான் இந்த கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த சிறிலங்க சுதந்திரக் கட்சி, தேசியகாங்கிரஸ், ரீ.எம்.வீ.பி போன்ற பலகட்சிகள் ஜனாதிபதியின் வெற்றிக்கு உழைத்தது.
    கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லீம்  முதலமைச்சர் வருவது தொடர்பில் ஏந்தவொரு மாற்றுக் கருத்தும் எங்களிடத்தில் இருந்ததில்லை அதனை நான் தெளிவாக விளக்குகின்றேன்.
    நாட்டின் ஆட்சிமாற்றத்தை அடுத்து மாகாண சபையினதும் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் தலைசாய்த்து ஒரு தேசிய அரசை நிறுவி சிறந்ததொரு நல்லாட்சியினை ஏற்படுத்துவோம் என்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி முஸ்லீம் காங்கிரசை ஆட்சி அமைக்க கோரினோம.;
    அதன்படி ஆட்சியமைத்துவிட்டு 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தையும் நிரைவேற்றிவிட்டு ஏனைய உதிரிக்கட்சிகளை ஓரங்கட்ட நடவடிக்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைமைத்துவமும் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் செய்து வருகின்றனர்.
    எமது நாட்டிலே 30 வருடகால யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட கிழக்க மாகாண சபையில் முதலசை;சராக வந்த சிவநேசதுரை சந்திர காந்தன் காந்தனுடன் இங்குள்ள பல உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டு எமது மாகாணத்தில் அச்சமற்ற சூழ்நிலை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இவ்வாறு முஸ்லீம் காங்கிரஸ் இவ்வாறான கழுத்தறுப்புக்களையும் முனாபிக் தனமான செயற்பாடுகளையும் செய்து வருவது இன்று மாத்திரமல்ல இது அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் குணாம்சமாகும்.
    ஆரம்பத்திலேயே தேசிய அரசு தொடர்பாகவும,; நம்பகத்தண்மை தொடர்பாகவும் எமது ஜனாதிபதி அவர்களை சந்தித்து பேசினேன் முஸ்லீம் காங்கிரஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு சபையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க நான் பேசுவேன் என்றார்.
    என்ன நடைபெற்றது என்பது தெரியாது இந்தவிடயத்தில் எங்களை வழிநடாத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்களும் எங்களது விடயத்தில் மௌனம் காத்ததாக நாங்கள் உணருகின்றோம் அவர் அவரடைய பணியை சரியாக செயற்படுத்த வில்லை என்பது தெளிவான உண்மையாகும்.
    முன்னாள் மாகாண கல்வி மற்றும் காணியமைச்சர் விமலவீர திசாநாயக்க ஒரு நேர்மையானவர் அவர் நினைத்திருந்தால் அமைச்சராக இன்று இருந்திருக்க முடியும் ஆனால் அவர் உண்மையின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் செயற்படுபவர் அவருடைய தலைமையில் பலமான எதிர்கட்சியாக செயற்படுவதுடன் சமுகத்துக்கு பயன்மிக்க செயற்பாடுகளுக்கு எங்களது ஆதரவு கிடைக்கும் என்பதுடன் தற்போது மேற் கொண்டது போன்று அதனை வியாபாரமாக கொண்டால் நாங்கள் பகிரங்கமாக எதிர்பதுடன் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் நடைபெறுகின்ற சகல அனாமோதையங்களையும் மக்களுக்கு வெளியிடுபவர்களாகவும் செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குற்றச்சாட்டு: மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி அரசியல் செய்ய மு.கா முயற்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top