(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் அஹமட் மொஹைடீன் - மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு தான் மிகவும் ஆழ்ந்த கவளையும், துக்கமும் அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
'மர்ஹூம் மொடன் ஹாஜியார் அவர்கள் மிக மார்க்கப்பற்று உள்ள ஒருவராகவும், பொருளாதாரத்தை அதிகமாக சேகரித்து அதனை சமூகத்திற்கும், மார்க்க விவகாரங்களுக்கும் பயன்படுத்துகின்ற, செலவு செய்கின்ற மிகப் பெரிய தனவந்தராகவும் திகழ்ந்தார்கள்.
நமது பிரதேசங்களில் ஏற்பட்ட யுத்த காலங்கள் மற்றும் அனர்த்த காலங்களில் அவர் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக தன்னுடைய சொந்த பொருளாதாரத்தை அள்ளி அள்ளி செலவு செய்து முஸ்லிம்களுடைய பாதுகாப்பு விவகாரங்களிலும், முஸ்லிம்களுடைய புனர்வாழ்வு விவகாரங்களிலும் அவர் செய்த பங்களிப்பு என்றும் யாரும் மறக்க முடியாதவை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக தன்னுடைய கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான சொந்தக் காணியை அன்பளிப்பாக வழங்கி அதிலே வீடுகளை கட்டி ஏழைகளை, குறிப்பாக இஸ்லாத்திற்கு வந்த பல குடும்பங்களை வாழ்வழிப்பதற்கும் அவர்களுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவர்கள் வழங்கி வைத்தமை என்றும் மறக்க முடியாத சம்பவங்களாகும்.
அதே போன்று பல பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள், மார்க்க விவகாரங்களில் பொருளாதாரத்தை செலவு செய்வதோடும், முழுமையான ஒரு மார்க்கத்தை பின்பற்றுகின்ற ஒருவராகவும் இருந்தார்கள்.
குறிப்பாக தப்லீக் ஜமாஅத்துடைய பணிகளிலே அதனுடைய வலர்ச்சிகளிலே ஆரம்ப காலம் தொடக்கம் அவர் செய்த பங்களிப்பு அலப்பெரியது.
அவருடைய மரணச் செய்தி கேட்டு நாம் மிகவும் ஆழ்ந்த கவலையும், துண்பமும் அடைகின்றோம்.
அல்லாஹுத் தஆலா அவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்தரமான சுவர்க்கத்தை வழங்க வேண்டுமென்று நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக.
அவருடைய மணைவி, பிள்ளைகள், குடும்பத்தர்கள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் இந்த சந்தர்பத்திலே நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.
அவர் விட்ட பணிகளை, அவர் தொடங்கிய பணிகளை நாங்கள் எல்லோரும் தொடர்ந்து செய்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் இந்த சந்தர்பத்திலே பிரார்த்திக்கின்றேன்' என அவ் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment