• Latest News

    March 24, 2015

    மு.காவின் முடிவுதான் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது: மாஹிர்

    (எம்.எம்.ஜபீர்)
    கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதற்கான  தீர்மானத்தினை ஓரிரு வாரத்திற்கு முதல் அறிவித்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்திருக்கும்
     
    இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி பிரதேச மத்திய குழுக் தெரிவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
     
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி பிரதேச மத்திய குழு அமைப்பாளர் ஏ.எம்.யாக்கூப் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு தெரிவு கூட்டத்தில்  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடி  என்ன வெங்காயமா உரிக்கின்றனர் என சிலர் எள்ளி நகையாடினர். 
     
    எங்கள் கட்சி தலைமை கூடிக் கூடிக் கலைந்து இழுத்தடிப்பு செய்யாமல் பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஒர் இரு கிழமைக்கு முன்னர் அறிவித்திருந்தால் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்திருந்த இனதுவேச சக்திகள்  முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை சிங்கள பிரதேசங்களில் முடிக்கிவிட்டிருப்பார்கள் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்திருக்கும் போது முஸ்லிம்களுக்கு எதிரான கதைகளை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட கூடாது  என்பதற்காகவே நாங்கள் அவர்களுடன் இருந்தோம். ஆனால் மக்களுடைய மனநிலை எங்களுக்கு தெரிந்திருந்திருந்தும் நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இருந்து கொண்டு இந்த முடிவுகளை அறிவித்தோம்  முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரம் அதிகமான  பிரதேசங்களில் முடிவடைந்த நிலையில்  கட்சி பொது வேட்பாளரை ஆதரிக்கும்  முடிவை அறிவித்தோம். 
     
    நாங்கள் முடிவை அறிவித்ததன் பின்பு அரச ஊடகங்கள் முழுமையாக முஸ்லிம், தமிழர்களுக்கு எதிராக தான் பிரச்சாரங்களை கொண்டு சென்றார்கள். சின்னச் சின்ன கிராமங்களில் அமைந்துள்ள  விகாரைகளிலுள்ள பிக்குமார்களை அலரிமாளிகையில் அழைத்து கூறப்பட்ட விடயம் என்னவென்றால்  முஸ்லிம்களும், தமிழர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் மீண்டும் நாடு பிரியப்போகின்றது ஆகவே நாங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தினை முன்னடுத்து கூடுதலான கிராம புறங்களில் மக்களின் மனதை மாற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.
     
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இரு வாரத்திற்கு முன்னர் அறிவித்திருந்தால் அனவாத பிரச்சாரத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருந்திருப்போம் ஆனால் மிகவும் பக்குவமாக இராஜதந்திர ரீதியில் எங்களுடை முடிவை தலைமை அறிவித்ததனால் அவர்களுக்கு பாரியளவில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் இனத்துவேசத்தினை ஏற்படுத்தி வெற்றி பெறும் சூழ் நிலை இல்லாமல் போயுள்ளது.
     
    இந்ந வெற்றியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக இருந்தது மட்டுமல்லாமல் இராஜதந்திரமான முறையில் நாங்கள் எங்களுடைய கட்சித் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள்  சாணக்கியமான முறையில் கட்சிக்குள் எந்தவொரு பிளவுகள் ஏற்படாமலும் நாட்டில் எந்த குழப்பமும் ஏற்படாமலும் சிங்கள பிரதேச மக்களின் மத்தியில் ஏற்பட்டிருந்த அமைதிப் புரட்சிக்கு வழிவிட்டு கட்சி முடிவை அறிவித்தனால் தான் இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் முடிவுதான் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது: மாஹிர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top