(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி
லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் விஷேட
மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று 15-03-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை
காத்தான்குடி டெலிகோம் வீதியிலுள்ள மஹ்ஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக்கல்லூரி
வளாகத்தில் இடம்பெறற்றது.
இதன் போது ஷீஆக்களும்
புரியப்பட வேண்டிய உண்மைகளும் எனும் தலைப்பில் மஹ்ஹதுஸ்ஸூன்னா மகளிர்
அறபுக்கல்லூரி பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மன்சூர் (மதனி)யும்
,ஷீஆக்கள் ஒரு வரலாற்றுப் பின்னணி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க். ஏ.ஜீ.எம்.
ஜலீல் (மதனி)யும் விஷேட உரை நிகழ்த்தினர்.
இதில்
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளனம், தஃவா அமைப்புக்கள் மற்றும் பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள்,
உலமாக்கள்; ,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு ஷீஆக்கள் தொடர்பான காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment