( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்.)
அப்பாரை மாவட்ட அஹதியா கல்முனை வலய நிந்தவூர் பிரிவின் செயலாளர்: மௌலவி, எம். ஜ். எம். ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் 15-03-2015,இன்று நிந்தவூர் அல்-ஹஸ்னாத் பாலர் பாடசாலையில் நிர்வாகிகள் ஒன்றுகூடும் நிகழ்வொன்று இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு கல்முனை வலய அஹதியா பாடசாலை தலைவர் எ.ஆர்.எம். சுபைர், மற்றும் அதிபர்கள் சகிதம் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் அஹதியா அமைப்பின் உறுப்பினர்களால் இவ் அஹதியா பாடசாலைகளிலுள்ள குறைபாடுகள், பாட வகுப்புக்கள் பற்றிய விடையங்கள், மற்றும் இதனை மேலும் முன்னகர்த்திச் செல்வதற்கான விழப்புணர்வூட்டல்கள் தொடர்பான விடையங்களும் அனைத்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்கலதுரையாடலின் பின்னர் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகளும், பாடப் புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment