• Latest News

    March 24, 2015

    எஸ்.பியின் அமைச்சு பதவியை சித்தரிக்கும் ஹிருனிக்கா: எதிர்க்கும் சந்திரிக்கா

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு கடந்த 22ஆம் திகதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.
    இதன்போது கிராமிய அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.
    எப்படியிருப்பினும் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்த்துள்ளார்.
    கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நிர்வாணமாக்கி வீதியில் ஓட விடுவதாக எஸ்.பி.திஸாநாயக்க பிரச்சார மேடைகளில் சூளுரைத்திருந்தார்.
    எஸ்.பி.திஸாநாயக்கவின் சூளுரையை கண்டித்து மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விளம்பரம் ஒன்றிலும் தோன்றியிருந்தார்.
    இவ்வாறான ஓர் நிலையில் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு அமைச்சர் பதவியை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எஸ்.பியின் அமைச்சு பதவியை சித்தரிக்கும் ஹிருனிக்கா: எதிர்க்கும் சந்திரிக்கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top