(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை
பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 55 குடும்பங்களின்
வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் நேற்று வழங்கி
வைக்கப்பட்டன.
சம்மாந்துறை கருவாட்டுக்கல் பிரதேசத்திலுள்ள
அல்-மதீனா மகளிர் அமைப்பில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்கள் இதற்கென
தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு
தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்கள் இதன்போது வழங்கி
வைக்கப்பட்டன.
சம்மாந்துறை கருவாட்டுக்கல்
அல்-மதீனா மகளிர்; அமைப்பின் தலைவி எஸ்.ரசீனா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்,
சம்மாந்துறை பாலர் பாடசாலை ஒன்றியத்தின் தலைவர் எம்.எம்.ஜூனைதீன், மாஹிர்
பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், கிராம உத்தியோகத்தர், பெருளாதார
அபிவிருத்தி உதியோகத்தர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது
மக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



0 comments:
Post a Comment