-எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர் -
தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரமாக,
சுகாதார அமைச்சினால் எதிர்வரும் 26.03.2015 தொடக்கம் 01.04.2015 வரையான நாட்களில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த டெங்கு நுளம்பு ஒழிப்பு
தொடர்பான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும், தேவையான விடயங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார,
சுதேச வைத்திய, சமுக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சினால்
ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு 2015-03-19 ல் கல்முனை பிராந்திய
சுகாதார சேவைகள் பணிமனையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்
எ.இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு
மாகாண சுகாதார, சுதேச வைத்திய,
சமுக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுடன் மாகாண
சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம்
அவர்களும் கலந்து கொண்டார்.
டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளானது கிழக்கு
மாகாணம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டியதுடன் சகல இன, பிரதேச மக்களுக்கும் இதன் மூலம் பயனடைய தேவையான ஆக்கபூர்வமான
நடவடிக்கையினை மேற்கொள்வதுடன் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் டெங்கு நுளம்பு ஒழிப்பு
நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பட்சத்திலேயே இவ்வேலைத்திட்டமானது வெற்றியளிக்கும் எனவும் தனது உரையின் போது கௌரவ
அமைச்சர் தெரிவித்தார்.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் சுகாதார
வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் ஊடாக கிரமமான முறையில் இடம் பெறுவதை உறுதிபடுத்தப்பட
வேண்டுமேனவும் மக்களுக்கான நோய்த்தடுப்பு சேவைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு
வழங்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவற்றை உடனடியாக நடைமுறைபடுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் அமைச்சர்
மன்சூர் வழங்கி வைத்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல
உணவகங்களிலும் சுத்தமான, ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுவதை
உறுதி செய்யவும், பழவகை விற்பனை
நிலையங்களில் சுத்தமான,
ஆரோக்கியமான பழங்கள் விற்பனை
செய்யப்படுவதை உறுதி செய்யவும் அடிக்கடி சகல உணவகங்கள் மற்றும் பழவகை விற்பனை
நிலையங்களை பரிசீலனைக்கு உட்படுத்துமாறும் அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு
பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் சகல மக்களும் சுகாதார அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கு தேவையான ஒத்துழைப்பை
வழங்குவதற்கு சித்தமாகவுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதாரப்
பணிப்பாளர், கல்முனை, அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்திய விசேட நிபுணர்கள், உணவு மற்றும் கட்டுப்பாட்டு வைத்தியர்கள், வைத்தியர்கள், மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக்க்கும் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment