• Latest News

    March 24, 2015

    19வது அரசியலமைப்பிற்கு சம்பிக்க எதிர்ப்பு - முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

    19வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க போவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
    கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
    அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள முடியாத முதுகெலும்பு இல்லாமல் தேர்தலில் தோற்றுப்போன ஒருவரின் அரசியலமைப்பு சதியே 19வது அரசியலமைப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    19வது அரசியலமைப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தி பிரதமருக்கு பலத்த அதிகாரத்தை வழங்குகின்றது.
    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கண்மூடித்தனமான அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே மக்கள் வாக்களித்தனர்.
    ஆனால் பிரதமரை நாட்டின் தலைவராக்குவதற்கோ, பாராளுமன்றம் ஜனாதிபதியை விட வலுவாக்குவதற்கோ மக்கள் வாக்களிக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    மேலும் 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவை மக்களின் தீர்ப்பிற்கு எதிரானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,
    ஜாதிக ஹெல உறுமய அனைத்து கட்சிகளுடனும் இணைந்து 19வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்கும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உறுதிபட கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
    முன்னாள் பிரதமர்களுக்கு பல்வேறு வகையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
    முன்னாள் பிரதமர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்,
    இதன்படி அவர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம், மற்றும் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
    மேலும் இலங்கையின் முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 19வது அரசியலமைப்பிற்கு சம்பிக்க எதிர்ப்பு - முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top