• Latest News

    March 15, 2015

    காத்தான்குடி -மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்-படங்கள்.

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    காத்தான்குடி-03 ஊர் வீதியிலுள்;ள மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலின் கீழ் இயங்கிவரும் மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸாவில் கடந்த 2013,2014 ஆண்டுகளில் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பொதுப் பரீட்சையில் சித்தியடைந்து விருதுகளையும், பரிசில்களையும்,சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம் 13-03-2015 இன்று வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

    மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இப் பாராட்டு வைபவத்தில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,காழி நீதி பதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி), எம்.எச்.எம்.புகாரி (பலாஹி),அஷ்ஷெய்க் எம்.ஐ.கபூர் (மதனி),காத்தான்குடி மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம் லெப்பை (பலாஹி), மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம்.எஸ்.கலீலுர் ரஹ்மான், குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையின் பரிசோதகர் மௌலவி எச்.எம்.எம்சாஜஹான் 
    (பலாஹி),காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் உஸனார் ஜேபி,மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலின் உப செயலாளர் எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஸிமி) உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள், 
    மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயல்; நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதன் போது அதிதிகளினால் 2013,2014 ஆண்டுகளில் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பொதுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் விருதும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

    இங்கு நிகழ்வின் சிறப்புரையை காத்தான்குடி மர்கஸ் ஸபீலுர் ரஷாத் அறபுக் கல்லூரியின் ஹதீஸ் கலைப் பிரிவு விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம்.ஸாஜித் அலி முப்தி (தப்லீஃகி) நிகழ்த்தினார்.

    இதில் மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.














     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடி -மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்-படங்கள். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top