பிரஜைகள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா பயணித்த ஜீப் வண்டி ஏ9 வீதி நாவுல, நாலந்த பிரதேசத்தில் தீப்பிடித்துள்ளது.
கண்டி நோக்கி நேற்று காலை ஜே.ஸ்ரீ.ரங்கா பயணித்துக் கொண்டிருந்த சந்திர்பத்தில் வண்டி தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் ரங்காவின் பாதுகாவலர்கள் இரண்டு பேரும் வாகன சாரதியும் தீப்பிடித்த வண்டியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் நாவுல பொலிஸார் குறித்த இடத்திற்கு வந்து தீயினை கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் விபத்தில் எவருக்கும் பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

0 comments:
Post a Comment