அப்துல் அஸீஸ்:
மலையக பிரதேசத்துக்கான விசேட ஆசிரியர் நியமன வேலைத்திட்டத்தை போன்று பொத்துவில் பிரதேசத்து பாடசாலைகளுக்கும் அப்பிரதேசத்தவரை உள்ளடக்கியதான ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொடுக்க எமது கட்சி அமைச்சரவை ஊடக நடவடிக்கை மேற்கொள்ளும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய சபை செயற்குழு அங்குரார்ப்பன நிகழ்வு பொத்துவில்-01ஆம் பிரிவில் இடம்பெற்ற போது அதில் கலந்துக்கொன்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பொத்துவில் பிரதேசத்துக்கான பாடசாலைகளில் நியமிக்கப்படும் வெளிப்பிரதேச ஆசிரியர்கள் தொடர்ந்து கடமையாற்றாது இடமாற்றம்களை பெற்றுக்கொண்டு தங்களுக்கு அருகிலுள்ள பிரதேசதங்களுக்கு சென்றுவிடும் நடவடிக்கை தொடர்சியாக இடம்பெருகின்றமையை தங்களின் வேண்டுகோள் ஊடக தான் அறிவேன் இவ் தேவைப்பாட்டை தீர்க்கும் முகமாகவே இவ் மாற்று வேளைதிட்டத்தினை எமது கட்சி மேட்கொள்ளுள்ளவுள்ளது எனக் குறிப்பிட்டார்.
அதிபர் ஏ.எம்.ஹகீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான சீ. எம்.முபீத், அம்பாறை மாவட்ட கட்சி இணைப்பாளர் ஏ.எம்.லத்தீப், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம், மருதமுனை, நாவிதன் வெளி பிரதேச இணைப்பாளர் சித்தீக் நதீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய சபை செயற்குழு அங்குரார்ப்பனமும் இடம்பெற்றது.
தலைவர்- ஆசிரியர் எ.எஸ்.எம்.சலீம் , செயலாளர்- எம்.எ.எம்.ரியாத், அமைப்பாளர் - எம்.ஐ.எம்.சஹீட் , கட்சி இணைப்பாளர் ஏ.ஏ.இர்ஷாத் ஆகியோர் தெரிவு செயப்பட்டனர்.



0 comments:
Post a Comment