• Latest News

    March 12, 2015

    காத்தான்குடி- மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் பாராட்டு வைபவம்

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    காத்தான்குடி – மூன்றாம் குறிச்சி ஊர் (பழைய கல்முனை) வீதியில் அமையப்பெற்றதும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் வரலாற்றில் மிக தொன்மை வாய்ந்த பள்ளிவாயலுமான மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கிவரும் அல்-குர்ஆன் மத்ரசாவின் மாணவ,மாணவிகள்  கடந்த 2013 ,2014 ஆண்டுகளில் குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் பொதுப் பரீட்சையில் சிறப்பான முறையில் சித்தியடைந்து- விருதுகளும், பரிசில்களும், சான்றிதழ்களும் பெற்றமைக்காக பாராட்டு வைபவம் ஒன்று இடம்பெறவுள்ளது.

    பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எல்.பதுர்தீன் தலைமையில் எதிர்வரும் 13.03-2015 வெள்ளிக்கிழமை, அஸர் தொழுகையைத்தொடர்ந்து இப்பாராட்டு வைபவம் நடைபெறவுள்ளது.

    24 மாணவ,மாணவிகளுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், பெற்றோர்கள் முதலானோர் அழைக்கப்பட்டிருப்பதாக பள்ளிவாயல் நிருவாக சபை உதவிச் செயலாளர் மௌலவி. மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) ஜே.பி தெரிவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடி- மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் பாராட்டு வைபவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top