• Latest News

    March 27, 2015

    நாம் இன்று இயந்திர வாழ்கை வாழ்ந்து வருகின்றோம்: அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்

    -அபூ-இன்ஷப்:
    ஆரோக்கியமான சமுகத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு வருடாந்தம் கூடுதலான பணங்களை செய்து வருகின்றன அதனை எமது மக்கள் கணக்கெடுப்பதில்லை வைத்திய சாலைகளில் பெறுமதிமிக்க மருந்துகளை இலவசமாக வழங்கி வருகின்றன எமக்கு அவை இலவசமாக கிடைப்பதனால் அவற்றுக்கு பெறுமதியில்லாத நிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையுடன் சம்மாந்துறை கல்லரிச்சல்- 1,2,3 ஆகிய கிராமசேவகர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேச எஸ்.29ம் வாய்கால் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு  சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சுர் தலைமையில் நடைபெற்றது.
    இந்த விழாவில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இவ்வாறு தெரிவித்தார்.
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அரசாங்கம் இந்த மாதம் 23 – 29ம் திகதிவரை எமது கிராமத்தை சுத்தம் செய்யும் சிரமதான வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது அதனை நாம் முழுமையாக பணன்படுத்தி பிரயோசனத்தை அடைந்து கொள்ள வேண்டும் எமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனையே எமது மார்க்கமும் செல்லுகின்றது.
    நாம் இன்று இயந்திர வாழ்கை வாழ்ந்து வருகின்றோம் எமது நாளாந்தக் கடமைகளைக் கூட நிறைவு செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம் இந்த நிலையில் நாம் எவ்வாறு பொது வேலைகளைப்பற்றி சிந்திக்க முடியும் என்ற என்னப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
    சம்மாந்துறைப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கூடுதலாக மக்கள் செரிந்து வாழுகின்ற பிரதேசமாக கல்லரிச்சல் பிரதேச காணப்படுகின்றன இங்கு நடைபெறுகின்ற எந்த வைபவங்களானாலும் அதிகமாக பெண்கள் கலந்து கொள்வது நான் அறிந்த விடயமாகும் இன்று கூட நீங்கள் திரண்டு வந்திருப்பது சந்தோஷமாகும்.
    இவ்வாறு ஒன்று திரண்டு எமது மண்னுக்குரிய  அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் ஆண்டாண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த அரசியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஒருதசாப்பகாலமாக இழக்கப்பட்டுள்ளன இதனால நாங்கள் சந்தித்த சோதனைகள் ஏராளம் இனி நாம் ஒரு போதும் தந்தையினை இழந்த பிள்ளைகளாக அநாதைகளாக வாழ முடியாது நாம் ஒவ்வொருவரும் சதாவும் சிந்தித்து எமது மண்னுக்கு சொந்தமான அரசியல் அதிகாரத்தினை அடைந்து கொள்ள நான் அற்பணிப்புடன் செயற்பட  வேண்டும் எனவும் அமைச்சர் மன்சூர் தெரிவித்தார்.
    இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஹூசைனுதீன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுர் றஹ்மான், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சம்மாந்துறைப் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சரீப் முஹம்மட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாம் இன்று இயந்திர வாழ்கை வாழ்ந்து வருகின்றோம்: அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top