இந்திய
அரசினால் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டுத்திட்டத்தின் கீழ் இன்று காலை
வாகரைப்பிரதேசத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா
உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்
போது கிழக்கு மாகாண முதல்மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கெளரவ அதிதியாக
கலந்து கொண்டு ஒரு தொகை வீடுகளை கையளித்து அங்கு கூடியிருந்த மக்கள்
முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.
இலங்கையின் மத்திய
ஆட்சியில் தேசிய நல்லிணக்க அரசை உருவாக்குவதற்கு முன்னோடியாக கிழக்கு
மாகாணத்தில் நல்லிணக்க மாகாண அரசாங்கமொன்றை அமைத்து சகலரும் முன்மாதிரியாக
விழங்கினோம். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
கடந்து
மூன்று தசாப்த காலமாக புரையோடிப்பொயிருந்த இனப்பிரச்சனையின் விழைவால்
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வடகிழக்கு மாகாண மக்களே. அதிலும் குறிப்பாக
ஏறத்தாள சமனிலையில் வாழ்ந்து வரும் இந்த மாகாணத்தில் யுத்தத்தின்
வடுக்களால் இன நல்லுறவு மிக மோசமாக சீர் குலைந்திருந்தது.
தமிழ்,
முஸ்லிம் , சிங்கள மக்களிடையே பரஸ்பர நல்லுறவு கெட்டு ஒருவரை ஒருவர்
சந்தேக கண்கொண்டு பார்க்கும் நில இருந்தது. இத்தனிக்கும் மேலாக யுத்தம்
இனமத பேதமின்றி பல்லாயிரக்கணக்கானோரை காவுகொள்ள வைத்திருந்தது.
தற்போது இந்த மாகாணத்தில் அமைதி நிலவுகின்ற போதும் யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மாறவில்லை.
கிழக்கு
மாகாணத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாகாண அரசு மக்களின் வாழ்வாதாரப்
பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முன்னுரிமை வழங்கியுள்ளது. அனைத்து
கட்சிகளையும் உள்ளடக்கியுள்ள தேசிய அரசை நாம் உருவாக்குவதில் இன்று வெற்றி
கண்டுள்ளோம்.
பல்வேறு கொள்கைகளையும் , நிலைப்பாட்டையும்
கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மாகாண அரசில் ஒருமித்து செயற்பட முன்வந்துள்ளமை
எமக்கு கிடைத்த பெரும் வெற்றியே. என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்
நஸீர் அஹமட் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சாள்ஸ்,
திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செளியன், இராணுவத்தளபதி சாந்த குமார, பொலிஸ்
அதிகாரி பாலித, வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரி கபித தவறாஜ், தேசிய
பணிப்பாளர் திணேஷ் கனக ரத்தினம் மற்றும் பல அதிகாரிகளும் பொதுமக்களும்
பயணாளிகளும் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment