ஏ.எல்.எம்.நபார்டீன் -
அக்கரைப்பற்று
அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட வித்தியாலய மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத்
தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) பாடசாலையின்
தகவல் தொழில்நுட்ப மண்டபத்தில் நடைபெற்றது.
இராணுவத்தின்
38வது அணியைச் சேர்ந்த லெப்டினன்ற் லெப்டினன் கேனல் கே.தமீம், மாணவத்
தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைக்க,
பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், மாணவத் தலைவர்கள் மற்றும்
வகுப்புத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைத்தார்.
தலைமைத்துவமும்
வழிகாட்டலும் என்ற பயிற்சியில் கலந்து கொண்டமையை உறுதிப்படுத்திய
சான்றிதழை, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக்கல்விப்
பணிமனையின் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர்
ஏ.எஸ்.அஹமட் கியாஸ் உள்ளிட்ட அதிதிகள் வழங்கினார்கள். மேலும்
மாணவத்தலைவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment