பைஷல் இஸ்மாயில் -
சுகாதார
அமைச்சின் தேசிய போஷாக்குத்திட்டத்தின் கீழ், சத்துணவு வழங்கி வைக்கும்
நிகழ்வு அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று
செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆயுர்வேத
ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல். நக்பர் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்
மற்றும் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து
கொண்டனர். மாதத்தில் இரு நாட்கள் நோயாளர்களுக்கு சத்துணவு வழங்கும்
செயற்றிட்டத்தினையும் ஆரம்பித்து வைத்துள்ளதாக வைத்திய அத்தியட்சகர்
கே.எல். நக்பர் இதன் போது தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை
ஆதார ஆயுர்வேத வைத்தியசாலை தொற்றா நோய்ப் பரிசோதனை மற்றும் சிகிச்சைப்
பிரிவு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment