• Latest News

    March 24, 2015

    உலகக் கிண்ணம்: முதன்முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது நியூசிலாந்து

    தென் ஆப்ரிக்க அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகக்கிண்ண இறுதிச்சுற்றுக்குள் முதன்முறையாக நுழைந்துள்ளது.

    ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் 14 ஓட்டங்களிலும், அம்லா 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

    மழை பெய்ததால் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அடுத்து நிதானமாக விளையாடிய டுபிளசி அரைசதம் கடந்து 82 ஓட்டங்களும், ரூஸ்சோ 39 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 49 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    43 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 65 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

    நியூசிலாந்து அணியின் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், டிரென்ட் பால்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 43 ஓவருக்கு 298 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர்களாக கமிறங்கிய மெக்கல்லம் அரைசதம் கடந்து 59 ஓட்டங்களும், காலிறுதியில் இரட்டை சதம் விளாசிய கப்டில் 34 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 6 ஓட்டங்களிலும், ராஸ் டெய்லர் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்து கோரி ஆண்டர்சன் 58 ஓட்டங்கள் எடுத்தநிலையில் டுபிளசிஸ் கையில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி நேரத்தில் திக் திக் என்று சென்ற போட்டியில் கிராண்ட் எலியாட் 2 பந்துகளுக்கு 5 எடுக்க வேண்டியது இருந்த போது சிக்சர் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இறுதிச்சுற்றுக்கு கூட்டிச் சென்றார்.

    அரைசதம் கடந்த கிராண்ட் எலியாட் 82 ஓட்டங்களுடனும், வெட்டோரி 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    42.5 ஓவரில் 299 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி முதன்முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. தென் ஆப்ரிக்க அணி மீண்டுமொரு முறை உலகக் கிண்ணத்தை தவறவிட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகக் கிண்ணம்: முதன்முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது நியூசிலாந்து Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top