• Latest News

    March 23, 2015

    நிந்தவூர் அறபா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

    நிந்தவூர் கமு/ அறபா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நிந்தவூரைச் சேர்ந்த பி.ரி.ஏ.றஹீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை கிழக்கு மாகாண சபையின் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் வழங்கியுள்ளார்.
    அதிபர் சேவை தரம் 02ஐச் சேர்ந்த இவர் ஒரு விஞ்ஞான பட்டதாரி (B.SC), அத்தோடு கல்விப்பட்ட டிப்ளோமாவினையும் (Dip.in Edducation)  பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இவர் அறபா வித்தியாலயத்தில் தமது கடமையை ஏற்றுக் கொண்டார்.
    இதற்கு முதல் ஒலுவில் அல்- ஹம்றா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். அத்தோடு நிந்தவூர் அல்- மதீனா மகாவித்தியாலயத்தின் உதவி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

    இவர் நிந்தவூர் 14ம் குறிச்சியைச் சேர்ந்த மர்ஹும் கே.பக்கீர்தம்பி, பக்கீர்தம்பி ரசீதா உம்மாவின் சிரேஸ்ட புதல்வராவார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    Item Reviewed: நிந்தவூர் அறபா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top