எம்.சஹாப்தீன்-நிந்தவூரின் வரலாற்றை கூறவிளைந்த மலர்க் குழுவினரிடையே தங்களின் கட்டுரைகள் தொடர்பில் ஒரு ஒருங்கிணைவு இருக்கவில்லை. அவர்கள் தங்களின் கட்டுரைகள் சிறப்பாக இருக்க வேண்டுமென்று செயற்பட்டார்குள். ஆனால், புத்தகத்தில் உள்ள எல்லா கட்டுரைகளும் சிறப்பாக அமைய வேண்டுமென்று சிந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒரு சிலர் தங்களின் இஸ்டத்திற்கு அமைவாக நிந்தவூர் வரலாற்று நூலை வடிவமைக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இன்ஷா அல்லாஹ் நாம் விரைவில் பகிர்ந்து கொள்ளலாம்.
இன்றைய எமது பார்வை எஸ்.எச்.எல்.அலியாரின் கட்டுரையின் மீது செல்லுகின்றது.
நிந்தவூரில் உள்ள ஸியாரங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஸியாரங்கள் முஸ்லிம்களின் வாழ்வியல் அடையாளங்களாகும். ஸியாரங்கள் பற்றி மார்க்க அறிஞர்களிடையே கருத்து முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும் ஸியாரங்கள் நமது அடையாங்கள் என்பதனைப் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை மட்டுமன்றி வாழ்வியல் அடையாளங்களையும் அழிக்க வேண்டுமென்பதில் பௌத்த இனவாத சக்திகள் குறியாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான் அவர்கள் அநுராதபுரத்தில் உள்ள ஸியாரமொன்றினையும் முற்றாக அழித்தார்கள்.
ஆகவே, நிந்தவூரின் வரலாற்றில் ஸியாரங்களின் வரலாறும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். கட்டுரையாளர் 'ஸியாரங்கள் - இறைநேசர்கள்' எனும் தலைப்பில் 07 ஸியாரங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதே தலைப்பில் சிங்காரத் தோப்புப் பற்றியும், பரவான் குடியிருப்புப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டும் தலைப்பிற்கு மாற்றமானதாக இருப்பதனால் வேறொரு தலைப்பில் குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
இயற்கை அனர்த்தங்கள் எனும் தலைப்பில் தென்கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால், 1978ம் ஆண்டு இப்பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் சூறாவளி பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. அப்போது எனக்கு 11 வயதாகும். இச்சூறாவளி பற்றி கட்டுரையாளர் குறிப்பிடத்தவறியுள்ளார்.
தொடரும்.......


















0 comments:
Post a Comment